Friday, April 24, 2020

தன்னம்பிக்கை பேச்சாளர் ரம்யா


miscellaneous

``புறக்கணிப்புகளே என் கிரீடம்!'' - ரம்யா கிறிஸ்டினா

``அந்தப் பொண்ணுகூட மட்டும் ஃப்ரெண்டாக வேண்டாம், தொடாம உக்காந்துக்கோ... சரியா?” - தன் சக வகுப்பு மாணவர்களின் பெற்றோர், ரம்யா கிறிஸ்டினாவின் முகத்துக்கு முன்னர் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள்தான், அவருக்கு இன்னும்கூட வலித்துக்கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவம் என்ற ஒன்று முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு, சராசரி வாழ்வுக்கே போராடியவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? புறக்கணித்ததற்கான காரணத்தையே தனது கிரீடமாக மாற்றிக்கொண்ட ரம்யாவின் தன்னம்பிக்கையிலும், அவர் வரையும் ஓவியங்களிலும் அத்தனை வண்ணம். 
இரண்டு குழந்தைகளும் பெண்களாய்ப் பிறந்துவிட்டதால் வீட்டைவிட்டு வெளியேறி, வேறு வாழ்க்கைக்குப் போய்விட்ட அப்பாவைப் பற்றிப் பேசுவதற்கு அவரிடம் எதுவுமில்லை. ``அம்மாவும் அப்பாவும் நெருங்கிய சொந்தக்காரங்க. நானும் எனக்குப் பிறகு ஒரு தங்கையும்தான். 5 வயசாகும்போது, கொஞ்சமா காரமோ, அசைவ உணவோ சாப்பிட்டாகூட கொப்புளங்கள் வரத் தொடங்கிடும். அலர்ஜிதான் காரணமா இருக்கும்னு நினைச்சு ஹாஸ்பிட்டல் போனேன். அலர்ஜிக்காகக் கொடுக்கப்பட்ட மருந்துகள் ஓவர் டோஸா இருந்ததால வந்ததுதான் இந்த மெலனின் குறைபாடு. இது மெலனின் குறைபாடுதான்னு நான் எத்தனை பேருக்குச் சொல்லிக்கிட்டே இருக்க முடியும்? பஸ்லயோ டிரெயின்லயோ போனா, எனக்குத் தொழுநோய் இருக்குன்னு எல்லாரும் விலகுவாங்க. பெண்கள் தங்களோட துணிகளை வெச்சு முழுசா கவர் பண்ணிட்டுத்தான் என் பக்கத்துல உட்காருவாங்க” என்கிறார் ரம்யா.
``மருத்துவத் தவறுதான் இந்த மெலனின் குறைபாட்டுக்குக் காரணம்னு புரியவெச்சு ஸ்கூல்ல சேர்ந்ததே ஒரு போராட்டம்தான். என்னை அணுகத் தெரியாத, கேலிப்பொருளாப் பார்த்த ஆசிரியர்களும் மாணவர்களும்தான் எனக்குப் பெரிய சவால். ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சேனோ இல்லையோ, ஒருத்தரை எப்படியெல்லாம் காயப்படுத்த முடியுமோ அது அத்தனையும் அனுபவச்சிருக்கேன். எல்லாவிதமான நெகட்டிவ் வார்த்தைகளையும் கேட்டிருக்கேன்” என்கிறார் ரம்யா.
இவருக்குப் பள்ளி நண்பர்கள், தோழிகள் என எவரும் இல்லை. 5 வயதில் தொடங்கி 20 வயது வரை விதவிதமான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தவர், தனது இயல்பே அழகு என ஏற்றுக்கொண்ட அந்தக் கணம்தான், வாழ்க்கையை மாற்றியிருக்கிறது ரம்யாவுக்கு. `மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி ரம்யா வர வேண்டாம். அதனால, என் மகளோட கல்யாணத்துல ஏதாவது பிரச்னை வரலாம்’ என்று சொன்ன பெரியப்பாவின் வார்த்தைகளால் உடைந்திருக்கிறார்கள் ரம்யாவும் அவரது அம்மாவும். அன்று ரம்யா தனக்காக எடுத்துக்கொண்ட சிகிச்சைதான் அவருடைய வைராக்கியம். மேலும் மேலும் துன்புறுத்தும் இந்த நிற மாற்றத்துக்கான மாத்திரைகளை நிறுத்திக்கொண்டு, தன்னைப்போலவே மெலனின் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்காக மேடைகள் ஏறிப் பேசிக்கொண்டிருக்கும் ரம்யா, இன்று பலருக்கும் நிவாரணி. 
தன்னம்பிக்கை பேச்சாளர், ஓவியர், மாடல், உதவி இயக்குநர் என இப்போது பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் ரம்யாவிடம், பார்ப்பவர்கள் எல்லோரும் கொஞ்சம் எனர்ஜியை எடுத்துக்கொள்ளலாம். ``வேலை இல்லாமல், கனவுகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும்தான் அடுத்தவங்களைப் பற்றி யோசிக்கிறேன். இந்த உழைப்பு நல்லாயிருக்கு. நீங்க வேணாப் பாருங்களேன், கொஞ்ச நாளைக்கு அப்புறம் ரொம்பவும் விரும்பப்படுற மாடலா நான் மாறியிருப்பேன்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ரம்யா. 
தொனித்த அத்தனை நம்பிக்கை வார்த்தைகளில், அவருக்கு அவர் மீதிருக்கும் அத்தனை ஆதூரத்தில் கொஞ்சம்கூட தயக்கங்களே இல்லை. ``மாத்திரைகளால் தலைமுடி உதிர்ந்தபோது எலிவால் மாதிரி இருக்கு என்ற கிண்டல் பேச்சும், தொழு நோயாளி என்ற புறக்கணிப்பும்தான் நான் தினமும் சந்தித்த யதார்த்தம். ஒரு டீச்சர் என்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தால் பாவம் என்றார். ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். பரிசு வாங்குவதற்காகச் சென்றபோது `உனக்கெல்லாம் பரிசு தர முடியாது!' என அவர்கள் சொன்னபோது, அந்த பிரேயர் ஹாலில் நின்றிருந்தவர்கள் மூன்றாயிரம் பேர். இவ்வளவும் கடந்த பிறகும் கண்ணாடியை வைத்துப் பார்க்கிறேன். நான் பேரழகிதான்” என்கிறார். 
பாலினப் பாகுபாடுகளை, சாதி, மத, வர்க்க பேதத்தைக் கேள்வி கேட்கும் எந்த நிகழ்விலும், கூட்டத்தில் தனியாக, இன்னும் அழகாகத் தெரிகிறார் ரம்யா. 
``அழகுக்கு இந்தச் சமூகம் கொடுத்திருக்கிற இலக்கணங்கள் ரொம்பவும் அருவருப்பானது. உங்களுடைய இயல்பையும், சுய நேசிப்பையும் எங்கேயாவது அடகு வைத்துவிட்டு உங்களுக்குக் கிடைக்கிற அன்பு இனிமே வேண்டாம்” - எனத் தொடங்குகிறார் இன்னொரு மேடைப் பேச்சை.

தன்னம்பிக்கை தாரகை தன்யா

 Saturday, April 25 2020
ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.

தன்னம்பிக்கையின் சிகரம்



300 முறை எலும்புகள் முறிந்தன.ஆனால்   மனம் தளராமல் வலியுடன் போராடி, வென்ற தன்னம்பிக்கைத் தாரகை தன்யா!



முன்னேறத் தூண்டும் பேச்சாளராக இருந்து கொண்டே பல ஆன்லைன் இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருபவர் தன்யா ரவி. ‘Brave Bangle Award 2012’ மற்றும் Annual Inspired Indian Foundation (IIF) Award 2014, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கு சேவை செய்ததற்கான தேசிய விருது.. என்று பல விருதுகளும் தன்யாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது. வெறும் தலைவலி வந்தால் பலரும் துடிதுடித்துப் போவார்கள். மூட்டு வலி என்றால் நடக்க முடியலையே என்று அரட்டுவார்கள். வாழ்க்கை முழுவதும் இரு சக்கர தள்ளு வண்டியில்தான் என்றாகிவிட்ட நிலையிலும் முடக்கிப் போடும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறியிருப்பவர் தன்யா.

தன்யா கேரளத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பெங்களூருவில்தான். கடந்த 29 ஆண்டுகளில் சுமார் முன்னூறு தடவைகள் தன்யாவுக்கு எலும்பு அறுவை சிகிச்சை நடந்திருக்கின்றன. ஏன்.. எதற்கு என்ன ஆச்சு என்ற கேள்விகளுக்கு தன்யாவே விளக்கம் தருகிறார்:



"நான் பிறந்தது பெங்களூருவில். பிறந்த வருஷம் 1989. அம்மாவுக்கு சுகப் பிரசவம். பிறக்கும் போது எந்த குறையும் இல்லை. சில நாட்களில் நான் தொடர்ந்து அழ ஆரம்பித்திருக்கிறேன். நிறுத்தாமல் அழுகை தொடரவே பெற்றோர்கள் என்னை மருத்துவர்களிடம் காட்டினார்கள். பலனில்லை. பல மருத்துவர்களிடம் மாறி மாறி காட்டினார்கள். ஆனாலும் எனது அழுகை நின்றபாடில்லை . கடைசியில் ஒரு டாக்டர் என்னை அரிய நோயான "ஆஸ்ட்ரோஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா' (Ostrogenesis Imperfecta) தாக்கியுள்ளதாகக் கண்டுபிடித்தார்.

இந்த நோய் வந்தால் எலும்புகள் பலமில்லாமல் மென்மையாக இருக்கும். சின்ன குலுக்கலையும் தாங்க முடியாமல் ஒடிந்து போகும். எழுந்து நடக்க முடியாது... எதையும் தூக்க முடியாது. இவ்வளவு ஏன்... கை காலை வேகமாக அசைக்க முடியாது. இருமல், தும்மல் வந்தால் கூட அந்த அசைவில் எலும்புகள் ஒடிந்து போகும். அந்த அளவுக்கு எலும்புகள் சக்தியில்லாமல் அமைந்திருந்தன. இதுவரைக்கும் முன்னூறுக்கும் அதிகமாக எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என்னால் மற்ற குழந்தைகள் போல ஓடியாடி விளையாடுவது இருக்கட்டும்... சில அடிகள் கூட நடக்க முடியாது என்றாகிவிட்டது. தொடர் எலும்பு முறிவு ஏற்பட்டதினால், நான் வீட்டில் இருந்த நாட்களைவிட அதிக நாட்கள் மருத்துவமனையில்தான் வசித்தேன்.



சில தருணங்களில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வழியில் மீண்டும் உடலில் எங்காவது எலும்பு உடைந்து போகும். வலியால் அலறுவேன். வீட்டிற்குப் போகாமல் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்புவோம். இப்படி பல முறை நடந்துள்ளது. இந்த நோய் வந்தால், "ராடிங்' சிகிச்சை என்றுள்ளது. அதை எனக்கு பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை அமையவில்லை. அப்போது போதிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். விதி எனக்காக ஒன்றை எழுதி முடித்துவிட்டதே! பெற்றோர்களோ எனக்காக மிகவும் சிரமப்பட்டார்கள். பல டாக்டர்கள்.. பல மருத்துவமனைகள் கண்டாகிவிட்டது. கடைசியில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்றோம். நிலைமை கொஞ்சம் மாறியது என்றாலும் என்னால் நடக்க முடியவில்லை.

அதனால் நான் பள்ளிக்குப் போவதை பெற்றோர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். நான் சுட்டித்தனமாகப் பேசுவேன். அதனால் அருகில் வசித்து வந்த விக்டோரியா ஆண்ட்டிக்கு என்மேல் கொள்ளைப் பிரியம். தனது மகள்களுடன் வீட்டிற்கு வந்து அந்தக் குழந்தைகள் முன்னிலையில் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். அவரது குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தது போலாச்சு.. எனக்கும் சொல்லிக் கொடுத்தது மாதிரியாச்சு. ஆண்டுகள் ஓடின...

ஆனால் எனது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. உருவமும் சிறு பிள்ளை வடிவத்தில் நின்று கொண்டது. விக்டோரியா ஆண்ட்டியின் பயிற்றுவிப்பில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்திலிருந்து ஆயத்த படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றேன். புதினம் எழுதுவது எப்படி என்ற சான்றிதழ் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளும், ஆய்வுகளும், ஆலோசனைகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. சிகிச்சைகள் எனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளாக மாறியிருந்தன. பத்து வயது வரை வலியை உணர முடியாமல் இருக்க மருந்து மாத்திரைகள் தந்து வந்தார்கள். பிறகு வலியைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று பெயின் கில்லர் மாத்திரைகளை விலக்கிவிட்டேன்.

"இணையம் எனக்கு அறிமுகமானது எனது வாழ்க்கையின் ஒரேயொரு நேர்மறை திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றி யோசித்து வாழ்க்கையை நமக்கு பொருந்திப் போகிற மாதிரி மாற்றிக் கொள்வதும் சாத்தியம்தான் என்று இணையம் என்னை ஒப்புக் கொள்ள வைத்தது. வாழ்க்கையின் நோக்கம் நன்றாக வசதியாக உல்லாசமாக வாழ்வது மட்டுமில்லை. கிடைத்த வாழ்வை எதிர் கொள்வதும்தான் என்பதை புரிந்து கொண்டேன். இசை என்னை என் மனதை லேசாக்குவது போல உணரத் தொடங்கினேன். இணையம் மூலம் எனக்கொரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டேன். யேசுதாஸ். சித்ரா பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். போகப் போக யேசுதாஸ். சித்ரா அறிமுகம் ஏற்பட்டு அவர்கள் குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

இணையம் மூலமாக வயநாட்டில் "பினு' என்ற பையனுக்கு என்னைப் போலவே நோய் தாக்கியிருப்பதை அறிந்தேன். சிகிச்சை செய்ய பண வசதியில்லாமல் கஷ்டப்படுவதை அறிந்ததும், "என்னைப் போல பினுவும் தளர்ந்து விழுந்துவிடக் கூடாது... நடக்க வேண்டும்.. நாலு பேரை பார்க்க வேண்டும்.. பேச வேண்டும்... பழக வேண்டும்.." என்பதற்காக இணையம் மூலம் பினுவுக்காக நிதி திரட்டத் தொடங்கினேன்.

அப்போதுதான் திருவனந்தபுரத்தில் சமூக சேவைகள் செய்துவரும் லதா நாயர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாகவும் பினுவிற்காக நிதி திரட்டினேன். இந்த பண உதவியால் பினுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தவழ்ந்து மட்டுமே போக முடியும் என்ற நிலையிலிருந்து "நடக்க உதவும் கைத்தடி' கொண்டு பினு மெல்ல மெல்ல நடக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையும் பார்க்கிறார். இது ஆச்சரியமான முன்னேற்றம்.

இந்த நிகழ்வின் மூலம் எனக்கு சில உண்மைகள் பாடங்கள் தெரியவந்தது. உதவி செய்வதற்கு விசால மனம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். உதவி வேண்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு துருவங்களை இணைக்க பாலம் அமைவதில்லை. அப்படி பாலம் அமைந்தால் கஷ்டப்படுகிறவர்களுக்கு ஒரு விடியல் .. வாழ ஒரு நம்பிக்கை கிடைக்கும். சக்கர நாற்காலியில் இருக்கும் என்னாலும் பாலமாக ஆக முடிந்ததே..! இந்த உதவி மூலமாக எனக்கு இன்னொரு அவதாரம் எடுக்கவும் முடிந்தது.

"ஆஸ்ட்ரோஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா' நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதன்முதலாக அரசு சாரா நிறுவனமாக "அம்ரிதவர்ஷினி சாரிடபிள் சொசைட்டியை' திருவனந்தபுரத்தில் லதா நாயர் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் சார்பில் எனக்கு பொது மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சி மூலமாகவும் இந்த எலும்பு நோய் குறித்த விழிப்புணர்வையும் மாற்றுத்திறனாளிகளுக்குக் காட்ட வேண்டிய கரிசனம் குறித்தும் பேசுகிறேன். கேரள தனியார் சானல்களில் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறேன்".
வீல்சேரில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தாலும்... எலும்புகள் முறியலாம் என்ற அபாயம் இருந்த போதும், தன்யா பயணிக்கிறார். சமீபத்தில் அமெரிக்கா வரை சென்று வந்திருக்கிறார். அமெரிக்காவிலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"மாற்றுத்திறனாளிகளிடம் "இதுதான் உனது எல்லை.. இதற்கு மேல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.." என்று எல்லைகளை நிர்ணயிக்காதீர்கள்.. அவர்கள் மற்றவர்களுடன் பேசப் பழக அனுமதியுங்கள். "என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குள் துளிர்விடும்..'' என்கிறார் தன்யா.

நாம் சாதிக்க பிறந்தவர்கள்
புதுமை விரும்பி...

அருனிமா சின்ஹா

புதுமை விரும்பி

எவரெஸ்டை எட்டும் நெஞ்சுரம் கொண்டவர் இவர்



462647_126430134222264_1277498793_o
உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அருனிமா சின்ஹா. தமது குடும்ப உறுப்பினரகளின் நடவடிக்கைகள் பல சமூகத்தின் கண்டனத்துக்கான நிலையில் அவரது மணவாழ்க்கையும் நம்பிக்கை தரவில்லை. இந்நிலையில் கொடியவர்கள், சமூக விரோதிகள் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதால் ஒரு காலை இழந்த அதிர்ச்சி, வலி, நிராசை இவற்றைத் தாங்கினார். தேசிய அளவில் கைப்பந்து (வாலி பால்), கால் பந்து (ஃபுட் பால்) விளையாடிப் பல பரிசுகளை வென்ற தன்னுடன் அந்த சோதனையான சோகமான தருணத்தில் விளையாட்டு அமைப்புகள் துணை நிற்காமற் போன நிராகரிப்பு இதையும் தாங்கினார் (மிகவும் குறைந்த அளவு இழப்பீட்டுத் தொகையே வழங்கப் பட்டது). சாதாரண உடல்திறன் கொண்டோரில் அபூர்வமாகவே யாரும் மலையேற்றம் மேற்கொள்வார்கள். இந்தத் துறையில் பல காலம் குழுவினருடன் பயிற்சி மேற்கொண்டார். எவரெஸ்ட்டின் அடிவாரத்தில் மேலும் கீழுமாக ஒரு அளவு உயரம் பல முறை ஏறி இறங்கித் தன்னபிக்கையையும் திறனையும் வளர்த்துக் கொண்டார். முயற்சியில் தோற்று உயிரழந்தோரின் உடலையும், ஆக்ஸிஜன் தீர்ந்து தன் எதிரேயே உயிரந்த பங்களாதேஷ் நபரையும் பார்த்தும் அவர் கலங்கவில்லை. மனம் தளரவில்லை. எவரெஸ்டின் சிகரம் எட்டிய பசேந்திரி பால் என்னும் வீராங்கனை இவருக்கு உதவினார். நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார். மேமாதம் 2013ல் தாம் கோடூரமாகக் காலை இழந்த கோடுமை நடந்த இரண்டே ஆண்டுகளில் அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறி இந்தியக் கொடியுடன் சாதனை புரிந்தார்.
வறுமை, உடல் ஊனம் அல்லது ஜாதி அல்லது நிறம் அல்லது பாலின் அடிப்படையில் தன்னை நிராகரிக்கும் சமூகத்தின் முன் நிலை குலைந்து போகும் யாருக்கும் இவர் ஒரு மகத்தான நம்பிக்கை சின்னம்.
மறுபக்கம் நம் விளையாட்டுத் துறையின் அமைப்புகள் எந்த அளவு சாதனையாளர்களைக் கைவிடுகின்றன என்பது இவரின் எவரெஸ்ட் சிகர சாதனையை எட்டிய பிறகும் இவரின் நீண்ட நாள் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதன் மூலம் நிரூபிக்கப் பட்டது. அவர் தாக்கப் பட்ட போதும் தாங்கவில்லை. எவெரெஸ்டையே எட்டிய போதும் கண்டுகொள்ள வில்லை. பின்னர் எப்படிக் கிட்டும் பதக்கங்கள் உலக அளவுப் போட்டிகளில்?
நெஞ்சுரம் ஒன்று போதும் நிமிரவும், நிலைக்கவும் வெல்லவும் என்று வாழும் உதாரணமான இவரை வாழ்த்துவோம்.


நிக்கோலஸ் ஜேம்ஸ் வோய்யச்சி

நிக் வோய்ச்சிச்


Jump to navigationJump to search
நிக்கோலஸ் சேம்சு வோய்சிக்
Nick Vujicic speaking in a church in Ehringshausen, Germany - 20110401-04.jpg
நிக்கோலஸ் சேம்சு வோய்சிக்
பிறப்பு4 திசம்பர் 1982 (அகவை 37)[1]
மெல்பர்ன்ஆஸ்திரேலியா
இனம்செர்பியன்
பணிஉணர்ச்சிமயமான பேச்சாளர் மற்றும் லைப் வித் அவுட் லிம்ப்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்
சமயம்கிறித்தவர்
வாழ்க்கைத்
துணை
கானே மியாகரா
நிக்கோலஸ் சேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமாக நிக் வோய்ச்சிச் (/ˈvɔɪɪ/ VOY-chich; பிறப்பு: 4 டிசம்பர் 1982), உணர்ச்சிமயமான ஆத்திரேலியப் பேச்சாளர். இவர் பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயால் (இரு கைகளும், இரு கால்களும் இல்லாதவர்) பாதிக்கப்பட்டவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பல இன்னல்களுக்கு ஆளான இவர், தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது அகவையில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார்.[2]

சொந்த வாழ்க்கை[தொகு]

செருபிய இனத்தைச் சார்ந்த இவர்,[3] ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் என்னுமிடத்தில் பிறந்தார்.[4] இவர் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார்.
ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.
இவர் தன்னுடைய எட்டாவது அகவையில் மன உளைச்சல் காரணமாக, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார்.[5] அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி காட்டினார்[6], இது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது.
தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.
தன்னுடைய ஏழாம் வகுப்பில், பள்ளியின் மாணவத் தலைவராகவும், தங்கள் பள்ளிக்கான நன்கொடை வசூலிப்பதற்காகவும் அருகிலுள்ள தொண்டு நிறுவங்களை அணுகுதல் உள்ளிட்டவைகளை செய்பவராகவும் விளங்கினார்.[7] பிறகு தன்னுடைய இலாப நோக்கற்ற லைப் வித் அவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) நிறுவனத்தை தொடங்கினார்.
2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. தற்போது, ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.[4]
2012-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் நாள், கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[8]

தொழில்[தொகு]


நிக்கோலஸ் சேம்சு வோய்சிக், சுவிசர்லாந்தில், 30 ஜனவரி2011 அன்று
வோய்ச்சிச் தன்னுடைய 21-ம் அகவையில் கிரிபித் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தார். கூடவே, மிகப்பிரபல்யமான பேச்சாளராகவும் உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவருடன் உரையாற்றியுள்ளார்.[9] இவர் பள்ளிகள், நிறுவனங்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார்.
வோய்சிச் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார். இவருடைய முதல் புத்தகமான, லைப் வித் அவுட் லிமிப்ஸ்(Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life)[10] 2010-ம் ஆண்டு வெளியானது. பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில் செய்யும் செயல்களை லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார். இதனுடைய இரண்டாம் பாகம், பிரிஸ்பேனில் உள்ள ஒரு தேவாலயத்தில் படமானது; இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும். இளைஞர்களுக்காக, நோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ் (No Arms, No Legs, No Worries: Youth Version) என்ற தொகுப்பினையும் வெளியிட்டார்.[11]
மார்ச் 2008, பாப் கம்மிங்கிசுடன், 20/20 என்ற அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணலில் பங்குபெற்றார். இவர் தி பட்டர்பிளை சர்க்கஸ் என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார், அது 2009-ம் ஆண்டு டோர்போஸ்ட் திரைப்பட திட்டத்திலும், மெத்தேட் பெஸ்ட் திரைப்பட விழாவிலும், தி பீல் குட் பிலிம் விழாவிலும் (2010) சிறந்த திரைப்படத்திற்கான பரிசு பெற்றது.[12] சம்திங்க் மோர், என்னும் காணொளியை யூடியூபில் வெளியிட்டார்.[13]