புதுமை விரும்பி
எவரெஸ்டை எட்டும் நெஞ்சுரம் கொண்டவர் இவர்
உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அருனிமா சின்ஹா. தமது குடும்ப உறுப்பினரகளின் நடவடிக்கைகள் பல சமூகத்தின் கண்டனத்துக்கான நிலையில் அவரது மணவாழ்க்கையும் நம்பிக்கை தரவில்லை. இந்நிலையில் கொடியவர்கள், சமூக விரோதிகள் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதால் ஒரு காலை இழந்த அதிர்ச்சி, வலி, நிராசை இவற்றைத் தாங்கினார். தேசிய அளவில் கைப்பந்து (வாலி பால்), கால் பந்து (ஃபுட் பால்) விளையாடிப் பல பரிசுகளை வென்ற தன்னுடன் அந்த சோதனையான சோகமான தருணத்தில் விளையாட்டு அமைப்புகள் துணை நிற்காமற் போன நிராகரிப்பு இதையும் தாங்கினார் (மிகவும் குறைந்த அளவு இழப்பீட்டுத் தொகையே வழங்கப் பட்டது). சாதாரண உடல்திறன் கொண்டோரில் அபூர்வமாகவே யாரும் மலையேற்றம் மேற்கொள்வார்கள். இந்தத் துறையில் பல காலம் குழுவினருடன் பயிற்சி மேற்கொண்டார். எவரெஸ்ட்டின் அடிவாரத்தில் மேலும் கீழுமாக ஒரு அளவு உயரம் பல முறை ஏறி இறங்கித் தன்னபிக்கையையும் திறனையும் வளர்த்துக் கொண்டார். முயற்சியில் தோற்று உயிரழந்தோரின் உடலையும், ஆக்ஸிஜன் தீர்ந்து தன் எதிரேயே உயிரந்த பங்களாதேஷ் நபரையும் பார்த்தும் அவர் கலங்கவில்லை. மனம் தளரவில்லை. எவரெஸ்டின் சிகரம் எட்டிய பசேந்திரி பால் என்னும் வீராங்கனை இவருக்கு உதவினார். நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார். மேமாதம் 2013ல் தாம் கோடூரமாகக் காலை இழந்த கோடுமை நடந்த இரண்டே ஆண்டுகளில் அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறி இந்தியக் கொடியுடன் சாதனை புரிந்தார்.
வறுமை, உடல் ஊனம் அல்லது ஜாதி அல்லது நிறம் அல்லது பாலின் அடிப்படையில் தன்னை நிராகரிக்கும் சமூகத்தின் முன் நிலை குலைந்து போகும் யாருக்கும் இவர் ஒரு மகத்தான நம்பிக்கை சின்னம்.
மறுபக்கம் நம் விளையாட்டுத் துறையின் அமைப்புகள் எந்த அளவு சாதனையாளர்களைக் கைவிடுகின்றன என்பது இவரின் எவரெஸ்ட் சிகர சாதனையை எட்டிய பிறகும் இவரின் நீண்ட நாள் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதன் மூலம் நிரூபிக்கப் பட்டது. அவர் தாக்கப் பட்ட போதும் தாங்கவில்லை. எவெரெஸ்டையே எட்டிய போதும் கண்டுகொள்ள வில்லை. பின்னர் எப்படிக் கிட்டும் பதக்கங்கள் உலக அளவுப் போட்டிகளில்?
நெஞ்சுரம் ஒன்று போதும் நிமிரவும், நிலைக்கவும் வெல்லவும் என்று வாழும் உதாரணமான இவரை வாழ்த்துவோம்.

No comments:
Post a Comment