Saturday, June 14, 2025

தொலைந்து போன காலம்

 *🙏🏼உடைப்பு :*


¶நட்பு உடைந்து ,

முக நூலானது ...


¶சுற்றம் உடைந்து ,

வாட்சப் ஆனது ...


¶வாழ்த்துக்கள் உடைந்து ,

ஸ்டேட்டஸ் ஆனது ...


¶உணர்வுகள் உடைந்து ,

ஸ்மைலியாய் ஆனது ...


¶குளக்கரை உடைந்து ,

குளியலறை ஆனது ...


¶நெற்களம் உடைந்து ,

கட்டடமானது ...


¶காலநிலை உடைந்து ,

வெப்பமயமானது ...


¶வள நிலம் உடைந்து ,

தரிசாய் ஆனது ...


¶துணிப்பை உடைந்து ,

நெகிழியானது ...


¶அங்காடி உடைந்து 

அமேசான் ஆனது ...


¶விளை நிலம் உடைந்து ,

மனை நிலம் ஆனது ...


¶ஒத்தையடி பாதை உடைந்து ,

எட்டு வழியானது ...


¶கடிதம் உடைந்து ,

இ மெயிலானது ...


¶விளையாட்டு உடைந்து ,

வீடியோ கேம் ஆனது ...


¶புத்தகம் உடைந்து ,

இ-புக் ஆனது ...


¶சோறு உடைந்து 

'ஓட்ஸ்'சாய்ப் போனது...


¶இட்லி உடைந்து ,

பர்கர் ஆனது ...


¶தோசை உடைந்து ,

பிட்சாவானது ...


¶குடிநீர் உடைந்து 

குப்பியில் ஆனது ...


¶பசும்பால் உடைந்து ,

பாக்கெட் ஆனது ...


¶வெற்றிலை உடைந்து ,

பீடாவானது ...


¶தொலைபேசி உடைந்து ,

கைப்பேசியானது ...


¶வங்கி உடைந்து ,

பே டி எம் ஆனது ...


¶நூலகம் உடைந்து ,

கூகுளாய்ப் போனது ...


¶புகைப்படம் உடைந்து ,

செல்ஃபியாய் ஆனது ...


¶பொது நலம் உடைந்து ,

சுய நலமானது ...


¶பொறுமை உடைந்து ,

அவசரமானது ...


¶ஊடல் உடைந்து ,

விவாகரத்தானது ...


"நிரந்தரம் உடைவது நிதர்சனம்... ஆகையால் ,

உடைவது உலகினில் 

நிரந்தரமானது " ..!


*தொலைந்துபோன காலம் மீண்டும் தொடருமா...?*

No comments:

Post a Comment